அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் அடையாள அட்டைகளை திருப்பி அளிப்போம் - கோவை அறிவொளி நகர் மக்கள் அறிவிப்பு

அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராவிட்டால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசிவிடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து கூறிய அவர்கள் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அங்கே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வீசி செல்வோம் எனவும் தெரிவித்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...