வனத்தியாகிகள் தினம்..!! கோவையில் பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களுக்கு அதிகாரிகள் மலர் அஞ்சலி.!

வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த பாலன், ரவிராஜன் ஆகிய இரண்டு பேருக்கும் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனத்துறையில் பணியாற்றி பணியின் போது வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.11 தேசிய வனத்தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த ஆண்டு யானை தாக்கி உயிரிந்த பாலன், காட்டு மாடு தாக்கி உயிரிழந்த ரவிராஜன் ஆகிய இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.



கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிந்த ஊழியர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...