தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கோவையில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் தங்களது கோரிக்கைகளை கடிதங்களாக தலைமை செயலகத்திற்கு அனுப்பினர்.



கோவை:தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர்.



தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர்.



இதில் மின் நுகர்வோர்களுக்கு நிலையான கட்டணத்தை ஒரே பிரிவில் பழைய கட்டணமாக 35 ரூபாய்க்கு மாற்றியமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும், மின் நுகர்வோர்களுக்கு பீக் ஹவர்ஸ் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், மின்சார வாரியத்தின் வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை(LT 3A-1 Traffic) அமல்படுத்த வேண்டும், சோலார் நெட்வொர்க் கட்டிடங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு மல்டி இயர் டிராபிக்கை உடனடியாக ரத்து செய்வதுடன் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு à®®à®±à¯à®±à¯à®®à¯ நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முதலமைச்சர் சிறு தொழில்களின் நிலையை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் அவர்களது இந்த கோரிக்கைகளை கடிதங்களாக தலைமை செயலகத்திற்கு அனுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...