பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா - கோவையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர அதிமுக சார்பில் அண்ணாசிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர அதிமுக சார்பில் அண்ணாசிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சே.ம.வேலுச்சாமி உட்பட கோவை மாநகர அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...