கலைஞரின் நூற்றாண்டு விழா - உப்பாறு அணை அருகே ரேக்ளா பந்தயம்

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி,மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை,காங்கேயம், சென்னிமலை, முத்தூர், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி, கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே பூளவாடி - தாராபுரம் சாலையில் குண்டடம் ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.



ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்திற்கு பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், சென்னிமலை, முத்தூர், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், கரூர், அரவக்குறிச்சி, கன்னிவாடி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.



200-மீட்டர் மற்றும் 300-மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற ரேக்ளா இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று.

முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் முதல் பரிசு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு 3/4 தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஐந்தாவது பரிசு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.



300-மீட்டர் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரேக்ளா மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு 1_பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசு 3/4 பவுன் தங்க நாணயம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

மூன்றாவது பரிசு 1/2 பவுன் தங்க நாணயம் கோப்பை வழங்கப்பட்டது.

நான்காவது பரிசு 1/4 பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

உப்பாறு அணை அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை காண குண்டடம் கொடுவாய் தாராபுரம் உடுமலைப்பேட்டை காங்கேயம் பகுதிகளிலிருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தை காண வந்திருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...