விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை புலியகுளத்தில் உள்ள ஆசியாவிலேயே 2வது மிக உயரமான விநாயகர் சிலைக்கு 2 டன் அளவிலான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன்னாகும்.



கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி புலியகுளத்தில் உள்ள ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.



இன்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு 2 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும். இதன் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன் என்பது குறிப்பிடத்தக்கது.



இங்கு காலை முதல் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போல் ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...