கோவில் நுழைவாயில் போல அலங்காரம் செய்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

கோவை தேர் நிலை திடல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில் நுழைவாயில் அலங்கார பந்தல் அமைத்து சிலைக்கு அருகே யானை முகம் போன்ற தூண்களுடன் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் அமைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தேர் நிலை திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் முகப்பு அமைக்கப்பட்டு, ராஜ கணபதி அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.



மேலும் விநாயகர் சிலைக்கு இரு புறங்களிலும் யானை முகம் கொண்ட தூண்கள் போல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக தகரத்தினால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியினர் கோவில் போன்றே நுழைவாயிலை அமைத்து அதற்குள் விநாயகர் சிலையை வைத்து இரு புறங்களிலும் யானை முகங்கள் கொண்ட தூண்களை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது அவ்வழியாக செல்லும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...