டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் சிறை - அக்.3ம் தேதி வரை காவலில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் கருணாகரன், டிடிஎஃப் வாசனை அக்டோர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.


காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கி சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎஃப் வாசனுக்கு வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கி சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது, வாகனம் இரண்டு முறை தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிடிஎஃப் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் கருணாகரன் முன்பு காவல்துறையினர் ஆஜப்படுத்தினர்.

அப்போது, வழக்கை விசாரித்த நடுவர் கருணாகரன், டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...