கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு துவக்கம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.



கோவை: விநாயகர் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 மற்றும் 19-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விநாயகர் சிலைகள் இன்றும் நாளையும் கரைக்கப்படுகின்றன.



கோவை மாவட்டத்தில் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



சிலைகளை வாகனங்களில் ஏற்றி வந்தவர்கள் சிலையை இறக்கி போலீசாரிடம் ஒப்படை வேண்டும். போலீசார் அந்த சிலைகளை குளத்தில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குளத்திற்குள் போலீசார் மீட்பு பணித்துறையினரை தவிர வேறு யாரும் இறங்க அனுமதி இல்லை.



மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குளங்களில் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பெரிய சிலைகளை ஒரு இடத்திலும், சிறிய சிலைகள் ஒரு இடத்திலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குளத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவிலும் சிலைகள் கரைக்கப்பட்ட உள்ளதால் மின்சார விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...