கோவையில் கிரீன்லைப் நிதி நிறுவனத்தின் ரூ.36 லட்சம் மதிப்பிலான சொத்து ஏலம் - மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

மோசடி வழக்கில் கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் நிதி நிறுவனத்தின் 36 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்துக்கள் ஏலமிடப்படுகிறது.


கோவை: 36.5 லட்சம் மதிப்புள்ள வீடு, வரும் 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் என்ற நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்தது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்நிறுவனத்துக்கு சொந்தமான,பேரூர் வட்டம், கோவைப்புதுார், குற்றாலம் நகரில், 1950 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட வீடு, அரசால் கையகப்படுத்தப்பட்டது. 36.5 லட்சம் மதிப்புள்ள இந்த வீடு, வரும், 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...