சுந்தராபுரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

4 ரோடுகள் சந்திக்கும் சுந்தராபுரம் சிக்னல் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒருசில நேரங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் கூட வழிவிடும் சூழல் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி ரோடு வழியாக வரும் வாகனங்கள் போத்தனூர் சென்று அடைவதற்கு, சுந்தராபுரம் சிக்னல் வரை செல்லாமல், அதற்கு முன்பாகவே குறிச்சியில் இடதுபுறம் திரும்பி காந்திஜி ரோட்டில் பயணம் செய்தால் சாரதா மில் ரோட்டை பிடித்து விடலாம் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து சுந்தராபுரம் வழியாக போத்தனூருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இவை முறையே சுந்தராபுரம் சிக்னலில் இருந்து இடது பக்கம் திரும்பி சாரதா மில் ரோட்டை கடந்து போத்தனூர் செல்கிறது. எனவே அனைத்து வாகனங்களும் சுந்தராபுரம் சிக்னலில் காத்து நின்று செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் 4 ரோடுகள் சந்திக்கும் சுந்தராபுரம் சிக்னல் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒருசில நேரங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் கூட வழிவிடும் சூழல் இல்லாத நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை பொள்ளாச்சி ரோடு வழியாக வரும் வாகனங்கள் போத்தனூர் சென்று அடைவதற்கு, சுந்தராபுரம் சிக்னல் வரை செல்லாமல், அதற்கு முன்பாகவே குறிச்சியில் இடதுபுறம் திரும்பி காந்திஜி ரோட்டில் பயணம் செய்தால் சாரதா மில் ரோட்டை பிடித்து விடலாம்.

பின்னர் அங்கிருந்து போத்தனூர் செல்வது எளிது. குறிச்சி காந்தி ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோடு கரடு- முரடாக காட்சி அளித்தது. ஆனால் தற்போது காந்திஜி ரோட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மிகவும் பரந்து விரிந்து நிலையில் உள்ளது.

அங்கு தற்போது நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் தங்கு தடைஇன்றி எளிதாக செல்ல முடியும். எனவே ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவை குறிச்சி காந்திஜி ரோட்டை பயன்படுத்தி போத்தனூர் சென்று வந்தால் சுந்தராபுரத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

சுந்தராபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் போது பழனி, பொள்ளாச்சி மற்றும் நகரப் பேருந்துகள் அனைத்தும் குறித்த நேரத்தில் பயணிக்க முடியும். எனவே போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது. போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணமும் உறுதிப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...