வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலகம் தேடும் தமிழ்-அறிவு மரபுகள் பன்னாட்டு கருத்தரங்கம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 23 மற்றும் 24ம் தேதிகளில் "உலகம் தேடும் தமிழ்- அறிவு மரபுகள்" என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கருத்தரங்கில் 600 மாணவர்களும், 500 தமிழ் பேராசிரியர்களும் ஆர்வலர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும், இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 23 மற்றும் 24ம் தேதிகளில் "உலகம் தேடும் தமிழ்- அறிவு மரபுகள்" என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கலைகளின் ஆய்வு நிறுவனம், அரி ஃபவுண்டேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்த கருத்தரங்கை நடத்துகின்றனர்.

இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியானது இதுவரை தமிழில் வெளிப்படுத்தப்படாத அறிவு சார் நூல்கள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் அவற்றில் உள்ள நல்ல சிந்தனைகளை பாதுகாத்து நூலாக வெளியிடுதல் என்பதை கருப்பொருளாகக் கொண்டது.

இந்தக் கருத்தரங்கில் 600 மாணவர்களும், 500 தமிழ் பேராசிரியர்களும் ஆர்வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் பல்வேறு தமிழ் கட்டுரைகள் நூல்களும் வெளியிடப்படுகிறது.

பேராசிரியர் கி.நாச்சிமுத்துவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழ் ஆய்வு தடங்கள் என்ற தலைப்பில் அவர் ஆய்வு செய்த துறைகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...