தாராபுரத்தில் என் மண் என் மக்கள் நடைபயணம் - திமுக எம்.எல்.ஏ மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காமராஜபுரம், சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, பூகடைக்கார்ணர், அமராவதிரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார்.



திருப்பூர்: தேர்தலில் போது கொடுத்த எட்டு வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட திமுக தாராபுரம் தொகுதி எம்எல்ஏ நிறைவேற்ற வில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.



என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காமராஜபுரம்,சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, பூகடைக்கார்ணர், அமராவதிரவுண்டானா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

தாராபுரம் புதிய காவல் நிலைய வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-



தாராபுரத்திற்கு தேர்தல் வாக்குறுதியாக எட்டு வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் விவசாயிகளுக்கு குளிர் பதன கிடங்கு அமைத்து தருதல். தாராபுரத்திற்கு அரசு தலைமை மருத்துவமனை கொண்டு வருதல். ராஜவாய்க்காலை தூய்மைப்படுத்துதல். தாராபுரத்தில் உள்ள புரவழிச்சாலை மேம்பாலத்தை ஐடிஐ கார்னரில் இருந்து அலங்கியம் ரோடு வரை விரிவாக்கம் செய்தல்.

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு ரயில் பாதை கொண்டு வருதல். அரசு கலைக்கல்லூரி உடனடியாக கட்டிக் கொடுத்தால் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றைக் கூட தாராபுரம் தொகுதி எம்எல்ஏ நிறைவேற்ற வில்லை என குற்றம் சாட்டினார்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக கொடுத்த நிதியில் 16,ஆயிரம் கோடி ரூபாய் நிதியிலிருந்து 6000 கோடி மட்டும் செலவு செய்து விட்டு மீதி பத்தாயிரம் கோடி ரூபாயை திருப்பி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.

இதனால் பட்டியல் இன மக்களின் சலுகைகள் பாதிப்படைந்தன.. இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது.

3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும். தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா. முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார்.

அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது. தமிழகத்தின் கஞ்சா தலைநகராக மாற்றுவதற்கு தி.மு.க. துடித்துக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் ஒழிக்க வேண்டிய நேரம் உங்களுக்கு வந்து விட்டது என அண்ணாமலை பேசினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...