சீர்மிகு நகரங்களுக்கான விருதை பெற்ற கோவை - குடியரசு தலைவரிடம் விருது பெறும் மாநகராட்சி ஆணையர்

மத்தியபிரதேசம் இந்தோரில் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து கோவை மாநகராட்சி ஆணையர் திரு.பிரதாப் விருது பெற உள்ளார்.


கோவை: கோயம்புத்தர் ஸ்மாராட் சிட்டி, திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல், பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் (Built Environment Category) முதல் பரிசு பெற்றுள்ளது.

வரும் 27 ஆம் தேதி அன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோரில் நடைபெறும் விழாவில் மேதகு இந்திய குடியரசு தலைவா் அவர்களிடமிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் விருதை பெற்றுக்கொள்ள உள்ளார்.

கோயம்புத்தார ஸ்மாட் சிட்டி, ISAC (India Smart city Award Contest) விருதுகள் 2022 ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் சிட்டி மிஷன், இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ஸ்மார்ட் சிட்டி (Built Environment Category) பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளது.

இந்திய அளவில் 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமாப்பிக்கப்பட்டது. மேலும், திட்ட செயல்பாட்டில் சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதில் கோயம்புத்தூர், இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் முதல் பரிசு பெற்றுள்ளது.

நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்திய குடியரசுத்தலைவர், மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் வருகின்ற செப்டம்பர் 27 அன்று நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன

சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நடைபெற்ற தோவில் தமிழ்நாடு தேசிய அளவில் இரண்டாவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.`

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...