பூனையுடன் புலி சண்டையிடுமா? வீரலட்சுமியின் கணவருக்கு சீமான் பதில்

வீரலட்சுமி கணவர் குத்துச்சண்டைக்கு அழைத்த விவகாரத்தில் பூனையுடன் புலி சண்டையிட முடியுமா? என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.



கோவை: கோவை சிட்ரா பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு 65அடி உயர தீரன்சின்னமலை நினைவு கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சீமான்,



நாம் தமிழர் கட்சியின் கொடிக்கு வரலாறு இருக்கிறதாகவும் பிற கொடிகளுக்கு என்ன வரலாறு இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருப்பது நாங்கள் தான் எனவும் மற்றவர்கள் தான் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். யார் யாருக்கு எவ்வளவு சீட், யாருடன் கூட்டணி பிறர்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே தேர்தல் பயணத்தை துவங்கி விட்டோம் எனவும் சீமான் தெரிவித்தார். என்னுடைய கனவு இந்திய பாராளுமன்றத்தில் செல்ல வேண்டும் என்பது கிடையாது எனவும் என்னுடைய தம்பி தங்கைகள் அனுப்புவேன் எனவும் அவர் கூறினார். தமிழ் தேசியத்தில் உரிமை என்ற கனவு தான் என்னுடைய கனவு. மக்களவை தேர்தலில்நான் போட்டியிடவில்லை. மோடி இங்கு போட்டியிட்டால், ராகுல் காந்திக்கு போட்டியிட்டால்அவர்களை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் தெரிவித்தார்.

விஜயலட்சுமி, வீரலட்சுமி விவகாரம் குறித்த கேள்விக்கு, எனக்கு அனைவரும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்லி இருக்கின்றனர்.

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? அது தேவையில்லாதது. என்னை எதிர்த்து பேசுவது அவர்களுக்கு ஒரு அடையாளம் எனவும் சீமான் தெரிவித்தார். உங்களை எதிர்க்க, விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா? என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்ககின்றேனோஅவர்கள் தான் எதிரி.என் எதிரியார் ? என் இலக்கு,என் பயணம், எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியும். என்னோடுஒப்பிட்டுப் பேசுவது எனக்கும் சிறுமை, உங்களுக்கும் சிறுமை, நான் செய்யும் வேலைக்கும் சிறுமை எனவும் அவர் கூறினார். 

இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை எனவும் தேச நலன் என வரும் பொழுது சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் சீமான் கூறினார்.மேற்கு வங்கத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் மம்தாவை எதிர்பார்ப்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் மாறி மாறிவாக்கு செலுத்துவார்களா? மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவு எடுப்பது எப்படி சரியாக இருக்கும். 

பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியவிவகாரத்தில் அண்ணா துவங்கிய கட்சி எதிர்வினையாற்ற வில்லை.அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும்அதிமுக, அது குறித்து எதிர்விணையாற்றி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி முறிந்தாலும்பரவாயில்லை என குரல் கொடுத்து இருக்கின்றது. இதில் அதிமுகவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. திமுகவின் ஆர் எஸ் பாரதி எதிர்வினையாற்றி இருக்கிறார். இதில் முதல்வரின் கருத்து என்ன? உதயநிதி, கருணாநிதி ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அண்ணா என்பதால் கண்டு கொள்ளவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை என்றாலும் அவரது கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், செய்தி தொடர்பாளர்கள் பேசியிருக்கின்றனர். இரண்டாம் கட்ட தலைவர் அனைவரும் பேசுகிறார்கள். மன்னன் எப்பொழுதுமே தளபதிகளை சண்டைக்கு அனுப்புவார். தோற்கும் பொழுது தான் அவர் களத்திற்கு வருவார். தளபதிகளை எடப்பாடியார் களத்திற்கு அனுப்பி இருக்கின்றார் என சீமான் தெரிவித்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...