இதய குறைபாடுகள், குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாராத்தான் - கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை ஏற்பாடு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தபட்டது.


கோவை: குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும் மேலும் அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' (Run for Little Hearts 2023) என்னும் மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சியினை எல்.எம்.டபிள்யூ நிறுவனம், லட்சுமி மில்ஸ் நிறுவனம், லட்சுமி கார்ட் குளோத்திங் நிறுவனம் மற்றும் லயன்ஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்தி குமார் பாடி - ஐ.ஏ.எஸ் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி மற்றும் பிற முக்கிய பிறமுகர்களுடன் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



2000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1, 3, 5 மற்றும் 10 கி.மீ தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.



இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இத்தொடர் திரள் ஓட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து ஜி.கே.என்.எம்.மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருதய பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது, மேலும் உலக இருதய தினமும் செப்டம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைளுக்கு மருத்துவ சிகிச்சைகள் சரியாக கிடைப்பதை ஊக்குவிக்கவும் மற்றும் இத்தகைய நோய்களுக்கு பலியான குழந்தைகளின் நினைவை போற்றும் வகையிலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

உலகளவில் 3 முதல் 5 மில்லியன் குழந்தைகள் நாள்பட்ட இதய நோயுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ருமாட்டிக் காய்ச்சலின் மிகவும் தீவிரமான சிக்கலாகும்.

நான்கில் ஒரு குழந்தை இதயக் குறைபாட்டுடன் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இவ்வாறு, CHD நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2,00,000-க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது 2018 ஆய்வின்படி. இவர்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு வாழ்க்கையின் முதல் வருடத்தில் சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு கடுமையான குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...