அதிமுக, பாஜக சண்டை போடுவதாக நடிப்பு - திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசை டெபாசிட் இல்லாமல் தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என திருப்பூர் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் சூளுரைத்தார்.



திருப்பூர்: அதிமுக-பாஜக சண்டைபோடுவதாக நடிக்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி தனியாக போய் சந்தித்தார். ஊழல் வழக்குதான் அதற்கு காரணம். உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வர உள்ளது. அதான் காலில் விழ சென்றார் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.



நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதற்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் திருப்பூர் படியூர் பகுதியில் மேற்கு மண்டல வாக்குசாவடி முகவர்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.



அப்போது பேசிய அவர், கழகத்தின் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்துடன் கடமையாற்றுங்கள். வெற்றி மட்டும் இலக்காக இருக்க வேண்டும். அதனை நோக்கி பயணிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சர்பார்ப்பதே முதல் கடமை. வாக்களர்களை ஈர்ப்பதுதான் இரண்டாவது கடமை. வாக்குப்பதிவு நாட்களில் வாக்களர்களை வர வைப்பது மூன்றாவது முக்கிய கடமை.

வாக்குச்சாவடி மைய வாக்காளர்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் படியும் ஒவ்வொரு குடும்பத்தின் ஒருத்தராக முகவர்கள் மாற வேண்டும். 1 மணி நேரம் கழகத்துக்காக ஒதுக்குங்கள். அந்த நேரத்தை வாக்குச்சவாடிக்காக ஒதுக்குங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தில் உள்ள திட்டங்களை படித்து மக்களுக்கு தேவைகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரக்கூடிய மக்கள் கோரிக்கைகளை எம் எல் ஏக்கள் , அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும். முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன்.

அண்ணா மீது ஆணையாக நீங்கள் கொண்டு வரும் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். எவ்வித கவலையுமின்றி மக்களை சந்தியுங்கள். 1 கோடி மகளிருக்கு கலைஞர் உரிமைதொகை திட்டத்தை நிறைவேற்றி விட்டோம். அதற்கான வரவேற்பை நீங்கள் மக்களை சந்திக்கும் போது பெறலாம். ஆனால் ஒன்றியத்தில் ஒரு ஆட்சி இருக்கு. இரண்டு முறை அந்த ஆட்சி இருக்கு. மூன்றாவது முறை வரப்போவது இல்லை.



சொன்ன எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. கருப்பு பணம் மீட்டு மக்களுக்கு 15 லட்சம் பிரித்து தருவேன் என்றாரே தந்தாரா?. அவர் தராவிட்டாலும் கழக ஆட்சி ஆயிரம் ரூபாய் தருகிறோம். அதையும் மினிமம் பேலன்ஸ் இல்லைனு கொள்ளை அடிக்கும் ஆட்சி ஒன்றிய ஆட்சி.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக சொன்னார் செய்தாரா? ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றார் செய்தாரா?. இந்திய பொருளாதராத்தை படுகுழிக்கு தள்ளி விட்டார். பண மதிப்பிழப்பு ஜி எஸ் டி என தவறான பொருளாதார கொள்கையால் கடுமையான சூழலுக்கு தள்ளி விட்டார்.

டாலர் சிட்டி திருப்பூர் டல் சிட்டி ஆகி விட்டது. பழைய படி முன்னேற்றுவதற்கான முயற்சியை நாம் செய்து வருகிறோம். தமிழ்நாட்டுக்கென பல வாக்குறுதிகள் கொடுத்தார். சேலம் உருக்காலையை நவீன படுத்துவதாக சொன்னார் செய்தாரரா?

மஞ்சளை கொண்டு அழகு சாதன பொருளாக மாற்ற நடவடிக்கை என்றார் செய்தாரா? .பல நகரங்களில் ஒன்பது விமான நிலையங்கள் அமைப்பதாக சொன்னார்கள். செய்தார்களா?.

டிசைன் டிசைனாக சொன்ன வாக்குறுதிகள் என்னாச்சு. எல்லாம் வாக்குறுதியாகவே உள்ளது. ஜி 20 மாநாட்டுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. இது பாஜக சாதனை இல்லை .

சந்திராயன் திட்டத்தில் பாஜகவின் சாதனை இல்லை. நேரு துவங்கி பலரின் பங்கு அதில் உள்ளது.33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2029 ஆம் ஆண்டுதான் தருவார்களாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பாஜக தமிழகத்தில் டெபாசிட் இல்லாத பாஜகவாக செய்து காட்டுவோம்.

அதிமுக பாஜக சண்டைபோடுவதாக நடிக்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி தனியாக போய் சந்தித்தார். ஊழல் வழக்குதான் அதற்கு காரணம். உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வர உள்ளது. அதான் காலில் விழ சென்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். சென்னையில் இருந்து டெல்லி சென்றால் தெரிந்துவிடும் என கொச்சின் போய் டெல்லி சென்றதன் மர்ம அரசியல் என்ன?.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு,பல்லக்கு தூக்கும் பழனிச்சாமி ஆதரிக்கிறாரே என்ன கனவுடன் அதரிக்கிறார் .சட்ட மன்ற தேர்தல் வந்தால் பழனிச்சாமிக்கு இப்போ உள்ள நிலையும் போய்விடும்.

இந்த தேர்தலிலும் பாஜகவை வீழ்த்துவோம் என சூளுரைத்து தனது உரையை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவு செய்தார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...