நிறுவப்படாத அம்பேத்கர் சிலை - கோவை ஆட்சியரிடம் ஒற்றுமை மேடை சார்பில் மனு

மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் சிலை நிறுவப்படாத நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி பொதுக் கூட்டத் தீர்மானத்தில் கோவை மாவட்டத்தின் மையப் பகுதியான நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ஆனால் இதுவரை அம்பேத்கர் சிலை நிறுவப்படவில்லை என்பதால் உடனடியாக அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இது குறித்து மனு அளிக்க வந்த ஒற்றுமை மேடை அமைப்பினர் கையில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...