கோரிக்கை வைத்த மலைவாழ் மக்கள் - உடனடி நடவடிக்கை எடுத்த கோவை ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர் கிராந்திகுமார், உயிருக்கு போராடும் மலைவாழ் மக்களை சேர்ந்தவருக்கு உடனடி மருத்துவ காப்பீடு திட்டம் அட்டையை வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆனைகட்டி வடக்கலூர் மலைவாழ் பகுதியை சேர்ந்த மல்லன் என்பவர் அவரது மகள் மற்றும் மருமகன் பாலக்காடு சாலையில் ஈச்சர் வாகனத்தில் வாழைக்காய் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத தருணத்தில் நடைபெற்ற விபத்தில் மருமகன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும் அவரது மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் மனு அளித்தார்.

தற்பொழுது கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் மகளுக்கு உடனடியாக மேல் சிகிச்சை அளிக்க முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அவரது கோரிக்கை மனுவை பரிசீலித்து உடனடியாக ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

Newsletter

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...