பட்டா பூமியாக மாறிய மயானம் - மாற்று இடம் வழங்குமாறு கோவை ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் மக்கள் மனு

மதுக்கரை தாலுக்கா அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் தங்களுக்கு மயானம் ஏற்பாடு செய்து தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் ஊருக்கு தென்புறமாக மயானம் அமைந்துள்ள நிலையில், அருகில் உள்ள நில உரிமையாளர் தனியார் நிறுவன ரியல் எஸ்டேட்டுக்கு அவரது நிலத்தை விற்பனை செய்து விட்டார். அந்த நிலம் வாங்கியவர்கள் மயானத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பியுள்ள நிலையில், இது சம்பந்தமாக நாங்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் நேரடியாக வந்த அவர் இது பட்டா பூமி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஊரில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் புதைக்க இடம் இல்லை என்பதால் எங்களுக்கு ஏதாவது ஒரு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலனி மக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...