மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் எழுந்தருளிய தேரை, கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


கோவை: மேட்டுபாளையம் அருகே உள்ள தென் திருப்பதி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் இரவு மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்திலும், அடுத்த நாள் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து 20-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந்தேதி கல்ப விருட்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் கருடசேவை நடந்தது. அப்போது ஸ்ரீமலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடங்களின் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தார். கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது மேளதாளங்கள் முழங்க, கோவிந்தா,கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் எழுப்பினர். நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்த தேரோட்டம், நிறைவாக நிலையை வந்தடைந்து.

அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து மலையப்ப சுவாமியின் அருளாசி பெற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...