தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் - கோவையில் பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை

கோவை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மை இந்தியா நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வருகிறது.



இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தூய்மை பணிகளில் ஈடுபட்டார்.



மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் கோயம்புத்தூர் பாஜக மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ஸ்வச்சதா அபியான் எனும் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு அங்கமாக அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என பாரத பிரதமர் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுக்க தூய்மை பணிகளில் கோடிக்கணக்கான நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுமட்டும் அல்லாமல் தூய்மை பணியாளர்களின் குறைகளையும் கேட்டிருந்தோம். அவர்களின் பிரச்சனைகளை கேட்டுள்ளோம். அதனை தகுந்த முறையில் அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளேன்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தூய்மை பணிகள் குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். தேவையான அளவு குப்பை வண்டிகள் இல்லை. சில இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பை எடுக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் தேவையான அளவு இல்லை. தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வருடமாக குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இவர்களது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசுவதாக இருக்கிறேன். தேவைப்பட்டால் மாநில முதல்வரையும் சந்தித்து இது குறித்து முறையிடுவேன் என கூறினார்.

கோவையைப் பொறுத்தவரை நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகளில் ஆர்வமாக பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாநகரம் இது. மற்ற மாநகரங்களுக்கு உதாரணமாக தன்னார்வத் தொண்டர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குன்னூர் சாலை விபத்தை பொறுத்தவரை மாநில நெடுஞ்சாலை துறை அங்குள்ள மாவட்ட நிர்வாகத்தோடு சேர்ந்து அடிக்கடி விபத்து நடக்கக்கூடிய இடங்களில் தகுந்த பாதுகாப்புகளை செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கக்கூடிய நஷ்ட ஈடுகள் அதிகரித்து கொடுக்க வேண்டும் என கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...