காந்தியடிகள் பிறந்தநாள் - கோவையில் கைத்தறி மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் அங்காடியில் முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்இ வைத்தார்.


கோவை: காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் கிராந்திகுமார், அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் புகைப்படங்களுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றைய தினம் அரசு சார்பிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அங்கு இருந்த காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் கிரி அய்யப்பன், கைத்தறித்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...