வீடு தேடி வரும் வங்கி சேவைகள் - கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

இரண்டாவது SIDBI வங்கி கோவையில் தொடங்கப்பட்டிருப்பதாகவும், கடன் தேடி வங்கிகளுக்கு சென்ற காலம் போய் வங்கிகள் நம்மை தேடி வரும் சூழல் உருவாகியிருப்பதாகவும் கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் SIDBI வங்கியின் 2 வது கிளையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.



கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,



"வங்கிகள் மூலமாக மானியம் எந்த கடனுக்கு உள்ளதோ அந்தப் பயனாளிகளுக்கு கடன் சென்று சேருகிறதா என்ற முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதனை புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், நாகாலாந்து ஆகிய இடங்களில் செய்துள்ளதாகவும் கோவையில் இந்த முயற்சி ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்டதாகவும் கூறினார்.

அதன்படி தற்போது நடைபெறும் விழாவில் 23,800 பேருக்கு 1278 கோடி ரூபாய் ரீடைல் லோன் வழங்கப்படுகிறது. மேலும் 2904 புதிய முத்ரா லோன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் கிராமப்புறத்தில் இருக்கும் பட்டியல் இனத்தை சார்ந்த மற்றும் மலைவாழ் பகுதியில் சார்ந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும்ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் 18 பேருக்கு கிட்டத்தட்ட 4 கோடி மதிப்பிற்கு தரப்படுகிறது.

மேலும் சாலையோர வியாபாரிகள் 7911 பேருக்கு 9.27 கோடி கடன் வழங்கப்படுகிறது. MSME க்கு 1043 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும்2867 விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதேபோல் வேளாண் துறை சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்காளர்களுக்கு 3749 கோடி கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

கடன் தேடி வங்கிகளுக்குச் சென்ற காலம் போய் தற்பொழுது வங்கிகள் நம்மை தேடி வரும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் சிறுகுறு தொழில்களுக்கு கடன் வழங்கக்கூடிய ஒரே வங்கி(SIDBI) நம் நாட்டில் உள்ளது. கோவையில் இரண்டாவது SIDBI வங்கி துவங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...