கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மேயர் கல்பனாவிடம் 51 மனுக்கள் அளிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்களிடம்‌ 51 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.


கோவை: பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலா்களுக்கு மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்களின்‌ தலைமையில்‌ இன்று (03.10.2023) நடைபெற்றது.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ (முழு கூடுதல்‌ பொறுப்பு) மரு.ச.செல்வசுரபி அவர்கள்‌, துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌ அவர்கள்‌, துணை ஆணையாளர்‌ க.சிவகுமார்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இக்கூட்டத்தில்‌ மேயர்‌ அவாகளிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ 51 நபர்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 8 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 14 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 6 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 15 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 1 மனுவும்‌, ஆகமொத்தம்‌ 51 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.



இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌ இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையா்‌ (வருவாய்‌) (பொ) தமிழ்வேந்தன்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தாராஜ்‌, உதவி ஆணையர்‌ (நிர்வாகம்)‌ (பொ) மாணிக்கம்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ சந்தியா, நூர்‌அகமது(பொ), பிரேம்‌ஆனந்த்‌, செயற்பொறியாளா்கள்‌, உதவி செயற்பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....