மதிப்பெண் திருத்தி வழங்குவதில் தாமதம் - உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தாமதம் செய்வதாக கூறி உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், கல்லூரியில் பரபரப்பு நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அறிவியல் பிரிவு வகுப்பில் பயின்று வரும் இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தவறாக உள்ளதாகவும், மதிப்பெண்களை திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.



இது குறித்து பல முறை கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் தரப்பில் கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்து தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மாணவர்கள் கூறும் பொழுது, மூன்று மாத காலமாக மதிப்பெண்கள் திருத்தி வழங்குவதில் பாரதியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...