தாராபுரம் பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி தலைவர் அறிவுரை

தமிழகத்தில் மிக வேகமாக வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த தாராபுரம் நகராட்சி பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: வைரஸ் காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை, கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, தற்போது தமிழகத்தில் மிக வேகமாக வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தாராபுரம் நகராட்சி பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

அதேபோல தங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை, கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.மேலும் வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலிப்பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றால் பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும். அதேபோல கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுரகுடிநீரை குடிக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...