எம்பி சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் - கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு நசுக்க பார்ப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.



டெல்லியில் எம்.பி சஞ்சய் சிங் கைது செய்ததை எதிர்த்தும் எம். பி.சஞ்சை சிங்கை விடுதலை செய்ய கோரி கோவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் கோவை செஞ்சிலுவை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஒன்றிய அரசால் இன்று கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் அவர்களின் கைதை கண்டித்தும், ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை நடவடிக்கை என்கிற பெயரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை நசுக்க பார்க்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சுதா அவர்களின் தலைமையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சினர் கோவை செஞ்சிலுவை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஒன்றிய அரசை கண்டித்தும் எம். பி.சஞ்சை சிங் விடுதலை செய்ய கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...