கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கோவையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.


கோவை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை நகர வள மையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.



இம்முகாமில் உடல் இயக்க குறைபாடு, கண் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மன வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.



தேவைப்படும் குழந்தைகளுக்கு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.



மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு, ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை படிவங்களும் வழங்கப்படுகின்றன.

52 பேருக்கு உதவி உபகரணங்களும், 25 பேருக்கு காதொலி கருவியும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் இம்முகாமிற்கு கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று செல்கின்றனர். இங்கு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...