சொத்துவரியை இம்மாதம் இறுதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்கத் தொகை - கோவை மாநகராட்சி அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5 சதவீதம் ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தெரிவித்துள்ளார்.


திகோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய இடங்களில்‌ 07.10.2023 மற்றும்‌ 08.10.2023 ஆகிய இரண்டு நாட்கள்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ 2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5% ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய இடங்களில்‌ 07.10.2023 மற்றும்‌ 08.10.2023 ஆகிய இரண்டு நாட்கள்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2023-24ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான சொத்துவரியினை நடப்பு மாதம்‌ 31.10.2023க்குள்‌ செலுத்தும்‌ சொத்து உரிமைதாராகளுக்கு சொத்துவரி தொகையில்‌ 5% ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌.

எனவே, பொது மக்களின்‌ வசதியினை கருத்தில்‌ கொண்டு கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ கடை வாடகைகள்‌ முதலிய அனைத்து வரி மற்றும்‌ வரியில்லா இனங்களை செலுத்த ஏதுவாக கீழ்க்கண்ட பகுதிகளில்‌ 07.10.2023 மற்றும்‌ 08.10.2023 ஆகிய நாட்களில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.56 மற்றும்‌ 57 பகுதிகளுக்கு ஒண்டிபுத்தூர்‌- நெசவாளர் காலனி: சுங்கம்‌ மைதானத்திலும்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 34ல்‌ மஞ்சீஸ்வரி காலனி - விஞாயகர் கோவில்‌ வளாகத்தில்‌ ஞாயிற்றுக்கிழமை அன்றும்‌, வார்டு 39ல்‌ சுண்டப்பாளையம்‌ - பெருமாள்‌ கோவில்‌ வளாகத்தில்‌ சனிக்கிழமை அன்றும்‌, வார்டு 75ல்‌ சீரநாயக்கன்‌ பாளையம்‌ நேத்தாஜி சாலை - மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்தில்‌ சனி மற்றும்‌ ஞாயிற்றுக்‌கிழமைகளிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளன.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வார்டு 93ல்‌ சர்ச்‌ வீதி - மாநகராட்சி சமுதாய கூடத்திலும்‌, வார்டு எண்‌.9ல்‌ ஸ்ரீ ராம்‌ நகா்‌ 6வது வீதியிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளன. வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.11ல்‌ ஜனதா நகர்-ஆரம்பப்பள்ளியிலும்‌, வார்டு எண்‌.28ல்‌ இளங்கோ நகர்-மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும்‌, 25ல்‌ காந்தி மாநகர் அரசு உயாநிலைப்‌ பள்ளியிலும்‌ நடைபெறுகிறது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 32ல்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு 63ல்‌ பெருமாள்‌ கோவில்‌ வீதி பகுதியிலும்‌, வார்டு எண்‌ 80ல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில்‌ நடைபெறும்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்கள்‌ காலை 9.00மணி முதல்‌ மாலை 5.00 வரை செயல்படும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இவ்வசதியினை முழுமையாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை செலுத்தலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...