கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டிலும் மாணவர்களை ஊக்குவித்து வெற்றி அடைய செய்கிறது பார்க் கல்வி குழுமம் - அமைச்சர் முத்துசாமி பாராட்டு

மாணவர்களின் திறனை பெற்றோரைவிட ஆசிரியர்களே நன்கு அறிவார்கள் ஆகவே ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி வலியுறுத்தியுள்ளார்

கோவை: கோவையில் பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பார்க் கல்வி குழுமம் மற்றும் ரைசிங் சன் ஈவென்ட்ஸ் நடத்திய கோவை சாம்பியன்ஸ் T 20 கிரிக்கெட் போட்டியானது கடந்து அக்டோபர்03 ஆம் தேதி துவங்கி அதன் இறுதி போட்டிகணியூர் வளாகத்தில் நடை பெற்றது.

விளையாட்டு போட்டிகளில் 24 அணிகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. இதன் இறுதி போட்டியில் ARS அகாடமிஅணி கோப்பையை வென்றது.

இந்த சாம்பியன்ஷிப்ஆட்டத்தின் பரிசளிப்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. ரவி தலைமையில் நடைபெற்றது. பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி வரவேற்புரை யாற்றினார்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராகஅமைச்சர்முத்துசாமி பங்கேற்றார்

அப்போது பேசுகையில், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டுமென்றுமென்று நமது முதலமைச்சர் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதுபோல பார்க் கல்வி குழுமம் தனது மாணவர்களை விளையாடிலும் மேன்மையடைய செய்வது சிறப்பு என்று வாழ்த்தினார்.

மாணவர்களின் திறனை பெற்றோரைவிட ஆசிரியர்களே நன்கு அறிவார்கள்.ஆகவே ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று அறிவுறுத்தினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுக்கு வந்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...