கைதிகளை சிறை மற்றும் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் கோவை மாநகர காவலர்களுக்கு கேமரா உடை

கோவை மாநகரில் கைதிகளை நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு (body own camera) 24 தோள்பட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது.


கோவை: சிறை செல்லும் கைதிகள் நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும் போது காவலர்களுடன் தகராறில் ஈடுபடுவதாகவும், வழிகாவலில் தப்ப முயல்வதாவும் எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வழிக்காவல் செல்லும் காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா பொருத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 24 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



கோவை மாநகரில் கைதிகளை நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு (body own camera) தோள்பட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது.



குற்றசம்பவங்களில் ஈடுபட்டு சிறை செல்லும் கைதிகள் நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும் போது காவலர்களுடன் தகராறில் ஈடுபடுவதாகவும், வழிகாவலில் தப்ப முயல்வதாவும் எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வழிக்காவல் செல்லும் காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா பொருத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 24 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



அதே போல கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,



சிறை கைதிகளை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை காவலர்கள், மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்க முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும் கண்காணக்கவும் 26 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாலைகளில் மட்டும் 15 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

சிசிடிவி மூலம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு பல கிலோ மீட்டர் தொலைவில் சென்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகரில் கஞ்சா புலக்கம் பெரிய அளவில் இல்லை. ஆனாலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதால் ஆரஞ்சு அலார்ட் என ஒத்திகை வாகன சோதனை நடைபெற்றது.

திருடிரென பெரிய அளவிளான கொள்ளை, குற்றச்சம்பவம் நடைபெறும் போது உடனடியாக மாநகர் முழுவதும் வாகன சோதனையை துரிதப்படுத்த குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாநகரில் இருசக்கர வாகன திருட்டு குறைந்துள்ளது. மேலும் பழைய குற்றவாளிகள் கண்காணிப்பில் உள்ள நிலையிம் இருசக்கர வாகன திருட்டில் சமீப காலமாக புதிய குற்றவாளிகள் இறங்கியுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை துரிதபடுத்த 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடிய விரைவில் காவலர்கள் காலிபணியிடம் நிரப்பப்பட உள்ளது. தற்போது காவலர்கள் பயிற்சியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...