கோவையில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை நடைபெற்றது.


கோவை: பேரிடர் காலங்களில் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை நடைபெற்றது.



இந்த ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் 38 தீயணைப்பு துறையை சேர்ந்த பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் மாநகராட்சி மருத்துவக் குழுவினர் மாதிரி ஒத்திகை முதலுதவி சிகிச்சையை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிட்டு பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...