கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சி - பள்ளி மாணவிகள் பங்கேற்பு

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.


கோவை: சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண பேண்ட்(Band) யை கையில் கட்டிவிட்டு இனிப்புகள் மற்றும் பூங்கொத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.



மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உறுதி வாசிக்க பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.



அதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, போட்டோ பாண்ட்டில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.



முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண பேண்ட்(Band) யை கையில் கட்டிவிட்டு இனிப்புகள் மற்றும் பூங்கொத்தை வழங்கி சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...