எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - கோவையில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்று

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு தரச்சான்றிதழ்களை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுவரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ISO உதவியாளர் (சத்துணவு) (பொ) வியாஸ்கர், உதவி கணக்கு அலுவலர் சந்திரபிரியா, தரச்சான்று இயக்குநர் கார்த்திக்கேயன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிணத்துக்கிடவு ஊராட்சி ஒன்றியம் கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...