கவுண்டச்சிபுதூரில் நரிக்குறவர்களுக்கு கடனுதவி - அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர்

கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி பகுதியை சேர்ந்த 140 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.64.70 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.


திருப்பூர்: எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் மெ.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார்.



அப்போது அம்மாபட்டி ஊராட்சியை சார்ந்த நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.64.70 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிருந்து உங்களை பழங்குடியினர் பிரிவினருக்கு அந்த பிரிவில் சேர்த்து நலத்திட்ட உதவிகள் எளிதாக வந்து சேர்வதற்கும், உங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உங்களை கைதூக்கி விடக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை வழங்கல் புதுமைப்பெண் என்கிற திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு /பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது.

அம்மாபட்டியை சார்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாகளையும், 64 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்களையும், தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.32.00 இலட்சம் மதிப்பீடில் செயற்கை நகை தயாரித்தலுக்கான கடனுதவி மற்றும் தமிழ்நாடு மகளிர் ஊரக வாழ்வாதார இயக்கும் சார்பில் 30 நபர்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி என மொத்தம் 140 நபர்களுக்கு ரூ.64,70,000/- மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டாவை பெற்ற நபர்கள் அங்கே வீடு கட்டி குடியேறிய பட்சத்தில் அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியின் போது, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்.புஷ்பா தேவி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார். தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் கோவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...