விபத்துகளில் தமிழகம் முதலிடம் - தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா அதிர்ச்சி தகவல்

தமிழகம் நிறைய விடயங்களில் முதல் இடத்தில் இருப்பதை போல விபத்துக்களிலும் முதலிடத்தில் இருப்பதாக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதன்மை செயலாளர் அமுதா கலந்து கொண்டார்.



போக்குவரத்து விதிகள் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் சென்னையில் வெளியிட்ட குட்டி காவலர் குறித்த கையேடு புத்தகத்தை வெளியிட்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசின் முதன்மை செயலாளர் அமுதா, ஆசிரியர்கள் சொன்னதை கேட்டதால் தான், தான் மேடையில் உட்கார்ந்திருப்பாதாகவும், பெற்றோர்களுக்கு நேரம் இல்லாத இந்த காலக்கட்டத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்றார்.

நேர்மை, ஒழுக்கம் என நல்ல பழக்கங்கள் சொல்லி கொடுத்தது ஆசிரியர்கள் தான் எனவும் புகழாரம் சூட்டினார். தமிழகம் நிறைய விடயங்களில் முதல் இடத்தில் உள்ளபோதும், விபத்துகளிலும் முதலிடத்தில் உள்ளதாகவும், அதிலும் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 26% உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கோவையில் அந்த சதவீதம் 30% ஆக உயிரிழப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் விழிப்புணர்வு உள்ள கோவையில் இத்தனை உயிரிழப்பு என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்று விழிப்புணர்வு செய்திருக்கலாம் என தோன்றுவதாகவும், இருசக்கர வாகன விபத்துகளில் 30% விபத்துகள் ஹெல்மெட் போடாததால் ஏற்படுவதாகவும், அலட்சியப்போக்கே விபத்துகள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

ஓட்டுநர் கவனக்குறைவால் விபத்துகள் அதிகம் நடப்பதாகவும், கோவையில் 90% ஓட்டுநர் தவறால் விபத்துகள் நடைபெறுவதாகவும் புள்ளி விவரத்துடன் விளக்கிய அவர், சாலை போக்குவரத்து அம்சங்களை அரசு கவனித்து சரி செய்யும் என்பதால், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியவையை வீடுகளில் கொண்டு செல்வதற்கே இந்த நெகிழ்ச்சி என்றும், அதற்கு இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் மூலம் குழந்தைகள் வாயிலாக வீடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கம் என்றார். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேன்டும் என்றும், சொல்வது வேறு செய்வது வேறாக இருந்தால் குழந்தைகளும் அப்படி தான் செய்வார்கள் என்றவர், மற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானேஷ்வரி, கோவை சரக துணை தலைவர் சரவண சுந்தர், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...