மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான எல்.இ.டி விழிப்புணர்வு - கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இந்த வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



இந்த வாகனம் இனிவரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தில் திரையிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவை பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...