கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் மனு

ஓய்வூதியம் உயர்வு, மருத்துவ படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஓய்வூதியம் உயர்வு மருத்துவ படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், இமாச்சலப் பிரதேசம் ராஜஸ்தான் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய காப்பீட்டு களைந்து மருத்துவமனை செலவீனத்தை அரசு ஏற்க வேண்டும், மருத்துவ படியை ஆயிரம் ரூபாய் உயிருக்கு வழங்க வேண்டும், வரும் ஆண்டுகளில் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினமாக அரசு ஏற்று அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்தக் கோரிக்கை மனு கோவை மாவட்ட தலைவர் டேவிட் மோகன் குமார் தலைமையில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...