கோவில் சுற்றுச்சவரை இடிக்க முயற்சி - நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் நரசிம்மன்நாயக்கன் பாளையத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவரை இடிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 கோவை: கோவை அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் 1999க்கும் பிறகு இட மனைகளாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலை அந்த ஊர் மக்களே சேர்ந்து நடத்தி வரும் நிலையில் அக்கோவிலில் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்த சிலர் பொது மக்களிடம் வசூலித்த பணத்தை முறையாக காண்பிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இதனால் அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தற்பொழுது அந்த நபர்கள் கோவிலின் சுற்றுசுவரை இடிக்க முயல்வதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருத்தங்கள் ஏற்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...