குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் அளிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலந்து வருவது தெரியவந்தால்‌ உடனடியாக மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ கைபேசி எண்‌ - 94435 38765 மற்றும்‌ உதவி எண்‌: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்குமாறு ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: பிரதான குழாய்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு வழங்கப்படும்‌ இணைப்பு குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ பழுது ஏற்பட்டால்‌ அல்லது நீர்‌ கசிவு ஏற்பட்டு அதன்வழியாக கழிவு நீர் குடிநீருடன்‌ கலக்கும்‌ சூழ்நிலை ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ 24x7 குடிநீர் திட்டப்பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. அவ்வப்போது நடைபெறும்‌ குடிநீர்‌ கசிவுகளும்‌ உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீர் குழாய்கள்‌, வணிக நிறுவனங்கள்‌, கல்வி நிறுவனங்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌, பிரதான குழாய்கள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு வழங்கப்படும்‌ இணைப்பு குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ பழுது ஏற்பட்டால்‌ அல்லது நீர்‌ கசிவு ஏற்பட்டு அதன்வழியாக கழிவு நீர் குடிநீருடன்‌ கலக்கும்‌ சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால்‌ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்போது கழிவு கலந்து விநியோகம்‌ செய்யும்‌ சூழ்நிலையும்‌ ஏற்படுகிறது. மேலும்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக குடிநீரை சேமித்து வைக்கப்‌ பயன்படுத்தும்‌ கீழ்நிலை மற்றும்‌ மேல்நிலை நீர்தேக்கத்‌ தொட்டிகளை அவ்வப்போது சுத்தம்‌ செய்து பயன்படுத்தவும்‌ பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலந்து வருவது தெரியவந்தால்‌ உடனடியாக கீழ்கண்ட மாநகராட்சி குடிநீர் விநியோக உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளவும்‌. மேலும்‌, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ கைபேசி எண்‌ - 94435 38765, உதவி எண்‌: 0422-2302323 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்குமாறு பொதுமக்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...