கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


 கோவை: புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறியும் வகையில் அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் அம்பேத்கர் சிலை அனைத்து மாவட்டங்களிலும் அரசே அமைத்துக் கொடுத்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் எங்குமே அம்பேத்கர் சிலை அமைக்கப்படவில்லை எனவும் அவரது சிலையை அமைப்பதனால் புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறிய முடியும் எனவும் எனவே அம்பேத்கரின் சிலையை கோவை நகரின் மையப் பகுதியில் அரசாங்கமே அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



இந்த மனம் தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த தமிழ் புலிகள் கட்சியினர் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...