மூலனூர் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் சுற்று ட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.

மூலனூர் சுற்று–வட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண்மைதுறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய எண்ணை வித்து பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்று நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வேம்பு பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.17 ஆயிரம் மற்றும் புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம், இலுப்பை பயிருக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் என மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் நடவு செய்தது முதல் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்கள் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...