கோவையில் ஓவியச்சந்தை - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு

தமிழ்நாட்டின் நுண்கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வரும் அரசு ஓவியசிற்பக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவில் சந்தை நடத்திட ஆணையிட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஓவியச் சந்தையில் தங்களது கலைப்படைப்புகளான ஓவிய மற்றும் சிற்பக் கலைபடைப்புகளின் வண்ண புகைப்படங்கள் (அஞ்சல் அட்டைஅளவில்) மற்றும் தன் விவரகுறிப்புடன் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நுண்கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வரும் அரசு ஓவியசிற்பக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவில் சந்தை நடத்திட ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் ஓவிய, சிற்பப் படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்து அதன் வாயிலாக ஓவிய சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர்த்துதல், கலைஞர்களை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் கோயம்புத்தூரில் ஓவியச் சந்தை நடத்தப்படவுள்ளது.

இந்த ஓவியச் சந்தையில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த கலைஞர்களின் 500 கலைபடைப்புகளும், பிறமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் 500 கலைபடைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், இவ்வோவியச் சந்தையில் கலைப் படைப்புகளை விற்பனை செய்ய ஏதுவாக விற்பனை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன.

எனவே ஓவியச் சந்தையில் தங்களது கலைப்படைப்புகளான ஓவிய மற்றும் சிற்பக் கலைபடைப்புகளின் வண்ண புகைப்படங்கள் (அஞ்சல் அட்டைஅளவில்) மற்றும் தன் விவரகுறிப்புடன் உதவி இயக்குநர் மண்டல கலைபண்பாட்டு மையம் அரசு இசைக்கல்லூரி வளாகம் செட்டிப்பாளையம் சாலை, மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் 641050 முகவரிக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 0422 2610290 அல்லது அலைபேசி எண் 8925357377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...