பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் குறைகளை தெரிவிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகள் ஏதேனும் குறைகள் இருப்பின் அரசிடம் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள், கூடுதல் கட்டணம் மற்றும் பிற குறைபாடுகள் காரணமாக பல இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள்.

அதனை நீக்கும் வகையில் ஆம்னி பேருந்துகளின் முறையற்ற இயக்கம், கூடுதல் கட்டணம் மற்றும் பிற இன்னல்களில் புகார்கள் ஏதும் இருப்பின் CUG No 9384808304 என்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார்தாரர் பெயர், தொலைபேசி எண், பயணம் செய்யும் தேதி, செல்லும் இடம், டிக்கெட்டின் புகைப்படம் கட்டண விவரம், பேருந்து எண் மற்றும் பெயர் ஆகிய விவரங்களுடன் புகார் தெரிவித்து உரிய தீர்வு பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...