சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமி நாளையொட்டி பக்தர்கள் கத்தி போடும் திருவிழா பக்தி பரவத்துடன் நடைபெற்றது.


கோவை: கத்தி போடும் திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தி போட்டு அம்மனை அழைத்தனர்.



அப்போது, பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழா நடைபெற்றது.



சாய்பாபா காலனி உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.



இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தி போட்டும் அம்மனை அழைத்தனர்.



இதனால் பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.



வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...