கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைத் தவிர அனைத்து தரப்பினரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊர்வலம் செல்ல அனுமதிக்கும் காவல்துறையினர், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் பேரணி நடத்த அனுமதி மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக உக்கடம் பகுதியில் பல்வேறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...