கோவையில் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - இரண்டு பேர் பலி

கோவை அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்- விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(34) இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை(45), கருப்பசாமி(51), அய்யனார்(45), சக்திவேல்(39). இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து மது அருந்தி உள்ளனர்.

பின்னர் வெளியில் எங்காவது சென்று மது அருந்தலாம் என்று எண்ணி ஏழுமலையின் ஆட்டோவில் வீரபாண்டியை அடுத்த மருதங்கரை என்ற மலைவாழ் கிராமப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பி உள்ளனர். ஆட்டோவை ஏழுமலை ஓட்டி வந்த நிலையில் மூலக்காடு எனும் பகுதி அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.



இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை மற்றும் கருப்புசாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். (ஏழுமலை ஆட்டோ ஓட்டுநர், கருப்பசாமி கேபிள் ஆப்பரேட்டர்)இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் போலீசார், பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், ஆகியோர் ஊர் மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...