தாராபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தாராபுரம் வட்டாரப் பகுதியில் அரசு விதித்துள்ள எந்தொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பட்டாசு கடைகள் அமைக்கும் பணியில் தனியார் கடை உரிமையாளர்கள் தீவிரம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அண்மைகாலமாக ஏற்படும் பட்டாசு விபத்துக்களை கருத்தில் கொண்டு அனுமதியில்லாமல் அமைக்கும் கடைகளை அரசு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தாராபுரம் வட்டார பகுதியில் பட்டாசு கடைகள் நடத்த தனியார் கடை உரிமையாளர் ஆங்காங்கே தற்காலிக செட் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆண்டு தோறும் 8 கடைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தாராபுரம் வட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அனுமதியில்லாமல் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதுவும் குடியிருப்புகள், பெட்ரோல் பங்குகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு கடை நடத்த அனுமதி இல்லை. ஆனால் மேற்கூறிய பகுதிகளில் அதிகமாக கடை நடைபெற்று வருகிறது. தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையினர், போலீஸ் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் பரிந்துரை செய்த பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பிறகு கடை அமைக்க வேண்டும்.

அப்போது அரசு விதிமுறைகள் பின்பற்ற தேவையான தீ அணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்காலிக கடை உரிமையாளர் எந்த நடைமுறைகளையும் கடைபிடிப்பது இல்லை. சமீபத்தில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு வெடித்து பலர் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கும் கடைகளில் சீன பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும், அனுமதியில்லாத கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசுகளை வாகனங்களில் இருந்து இறக்கி வைக்கும் போது பட்டாசுகள் வெடித்து பலர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...