கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.


கோவை: கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.



இந்த போட்டியில் கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இந்நிலையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த கலைத் திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், நேரில் பார்வையிட்டு இதில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு கலை நிகழ்ச்சி போட்டிகளை கண்டுகளித்தார். இதில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...